cat 4 - 2026

வலைக்குள்ளே சென்று லபக்கிய பூனை!

சற்றுமுன் அடடே... அப்படியா? பொது தகவல்கள்
cat 4 - 2026

க்யூட்டாகவும் டெரராகவும் உள்ள ஒரு பூனை வீடியோ சமூக ஊடகங்களில் அனைவரது கவனத்தையும் பரவலாக கவர்ந்துள்ளது.

இது காட்டில் நடைபெறும் சம்பவமல்ல, ஒரு நகரத்தின் சாலையில் பூனை நடத்தும் சாமர்த்தியமான வேட்டை வீடியோ இது.
பதுங்கிப் பாயும் டெக்னிக் வேட்டையின் ஒரு பரிணாமம் என்றால், பொறுத்திருந்து எலி வலையிலிருந்து வரும் வரை காத்திருந்து லபக் என்று கவ்விச் செல்லும் பூனையின் இந்த வீடியோ ஆச்சரியத்தை அளிக்கிறது.

சாலையில் ஒரு ஓட்டைக்குள் இருந்து மெதுவாக எட்டிப்பார்த்த எலியை, கவ்விக் கொண்டு துவம்சம் செய்யும் பூனையின் வீடியோ இது.

இது டாம் அண்ட் ஜெர்ரி வீடியோவை தோற்கடிக்கும் புத்திசாலி பூனை அண்ட் எஸ்கேப் ஆக முடியாத எலி வீடியோ.

வாழ்க்கை என்பது அடுத்த நொடியில் நமக்காக என்ன வைத்திருக்கும் என்ற தத்துவத்தை ஒரு சில நொடிகளில் நமக்கு உணர வைக்கும் பூனை-எலி வைரல் வீடியோ இது.

இந்த வீடியோவை பலரும் பார்த்து, பகிர்ந்து, வைரலாக்கி வருகின்றனர். இதுபோன்ற வீடியோக்கள் animals_powers என்ற இன்ஸ்டா பக்கத்தில் அவ்வப்போது பகிரப்படுகிறது. அவை வைரலும் ஆகின்றன.

பூனையை கண்ட குழந்தையும் சிறிது நேரத்தில் தனது அழுகையை நிறுத்திவிடுகிறது. இந்த வீடியோவைப் பார்த்த பலரையும், அந்தக் குழந்தையை இந்தப் பூனை இரண்டாம் தாய் போல் பார்த்துக்கொள்கிறது என கூறி வீடியோவை பகிர்ந்துவருகின்றனர். இதனால் அந்த வீடியோ வைரலாகிவருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.