eagle - 2026

கொத்திக் கொத்தி களிப்படையும் கழுகு!

சற்றுமுன் அடடே... அப்படியா? பொது தகவல்கள்
eagle - 2026

பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகள் மற்றும் பறவைகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன.

தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பாம்பு மற்றும் கழுகுகள் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் கழுகு பாம்பை பிடித்து வேட்டையாடுவதையும், பாம்பு அதன் பிடியில் இருந்து வெளியேற முயற்சி செய்து கொண்டிருப்பதையும் காண முடிகின்றது.

வைரலாகி வரும் இந்த வீடியோவில், காற்றில் பறக்கும் போது கழுகு ஒன்று பாம்பை பார்த்து விடுகிறது. உடனே கழுகு பாம்பின் அருகில் வந்து அதை பிடித்து விடுகிறது. கழுகின் நகங்களில் சிக்கி, பாம்பு மிகவும் கஷ்டப்படுகிறது.

கழுகு தொடர்ந்து பாம்பை தாக்குகிறது. பாம்பு பார்ப்பதற்கு மிகவும் ஆபத்தானதாக தோன்றினாலும், அது கழுகின் நகங்களில் மோசமாக சிக்கிக்கொண்டுள்ளது வீடியோவில் தெரிகிறது. பாம்பால் தன்னை காப்பாற்றிக்கொள்ள ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதும் தெரிகிறது.

பாம்பு கழுகிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தொடர்ந்து முயற்சி செய்தும் தப்பிக்க முடியாமல் தவிப்பதை வீடியோவில் காண முடிகிறது.

சில வினாடிகள் கொண்ட இந்த வீடியோ nature_okay என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டது. இந்த வீடியோ இதுவரை ஆயிரக்கணக்கான வியூஸ்களையும் லைக்குகளையும் பெற்றுள்ளது.

ஒருவர் எவ்வளவு பலசாலியாக இருந்தாலும், அவரையும் படுத்தி எடுக்க மற்றொருவர் இருப்பார் என்ற கருத்தை இந்த வீடியோ எடுத்துக்காட்டும் வகையில் உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.