புதுச்சேரி: 390 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வுக்கு வயது உச்சவரம்பை 24 ஆக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.
புதுச்சேரி காவல்துறையில் 390 காவலர் பணியிடங்களை நிரப்ப போலீஸ் தலைமையகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது. உடற்தகுதி மற்றும் எழுத்து தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு நடக்க உள்ளது. காவலர் பணிக்கு பிளஸ் 2 கல்வி தகுதி, 22 வயது உச்சவரம்பு என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
பல ஆண்டுகள் கழித்து காவலர்கள் பதவிக்கு தேர்வு நடப்பதால் வயது உச்சவரம்பை 2 ஆண்டுகள் உயர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து காவலர் பதவிக்கான வயது வரம்பை 24 ஆக உயர்த்த அரசு முடிவு எடுத்து உள்ளது.
முதல்வர் நாராயணசாமி உத்தரவின் பேரில் போலீஸ் தலைமையகம் அதிகாரிகள் இதற்கான கோப்புகளை தயார் செய்து தலைமை செயலாளருக்கு அனுப்பி வைத்தனர்.




