திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவிலில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் 9 மீட்டர் உயரதிற்கு மேல் உள்ள கட்டிடங்களை அகற்றக் கோரிய வழக்கில் மத்திய தொல்லியல் துறையின் இயக்குநர், திருச்சி மாவட்ட ஆட்சியர், இந்து சமய அறநிலையதுறை ஆணையர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு இட்டுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்த மகுடேஸ்வரன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்.
திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவிலில் ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் 9 மீட்டர் உயரதிற்கு மேல் விதிமீறி கட்டபட்டுள்ள கட்டிடங்களை ஆய்வு செய்து அகற்ற கோரி வழக்கறிஞர் ஆணையத்தை நியமனம் செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் M.M.சுந்தரேஷ், சதீஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது இது குறித்து மத்திய தொல்லியல் துறை இயக்குநர்,திருச்சி மாவட்ட ஆட்சியர்,இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.




