அதிமுக செயற்குழு குறித்து வரும் செய்திகள் யூகங்கள் மட்டுமே என்று அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறினார்.
கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜீ செய்தியாளர்களிடம் பேசிபோது… தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக, திமுகவுக்கு இடையே தான் போட்டியே! அதிமுக ஆரம்பித்த காலத்தில் இருந்து அதிமுகவிற்கும் திமுகவுக்கும் இடையே தான் போட்டி! தவிர, மற்றவர்கள் எங்களுக்கு எதிர்கட்சிகள் அல்ல, உதிரிக்கட்சிகள்.
அதிமுக செயற்குழு சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தில் தேர்தல் குறித்த வியூகங்கள் பற்றிதான் பேசப்பட்டது. அதிமுக உறுப்பினர்கள் சேர்க்கை பணி வேகமாக நடைபெற்று வருகிறது. செயற்குழுவில் தேர்தல் வரும் போது எப்படி பணியாற்ற வேண்டும் என்றும் பிரதனமாக விவாவதிக்கப்பட்டது. அதனை வெளியே கூற முடியாது.
யூகங்களின் அடிப்படையில் பல்வேறு கருத்துகள் வருகிறது தவிர, செயற்குழு அமைதியான, ஆரோக்கியமான முறையில் நல்ல முடிவு எடுத்துள்ளது என்றார் அவர்.




