மறைந்த வாஜ்பாயின் அஸ்தி விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தடைந்தது. அதில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.
வாஜ்பாய் நெருங்கிய உறவினர் கருணா சுக்லா பாஜக வாஜ்பாய் அஸ்தியை வைத்து அரசியல் செய்கிறது என்ற கேள்விக்கு யார் உறவினர், அவருக்கு குடும்பம் கிடையாது மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்தவர் அவர். உறவுக்கு அங்கு வேலையே கிடையாது.
எவன் ஒருவன் தன்னை நாட்டுக்காக நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்து வைத்தானோ அவனுக்கு சொந்தம் இந்த நாட்டில் உள்ள 120 கோடி மக்கள் தான்.
தனிப் பட்ட உறவுக்கு இடமே கிடையாது என்றார்.
மேலும், நாட்டுக்காக வாழ்ந்த மகான்கள் நாட்டு மக்களுக்கே சொந்தம் எந்த சொந்தத்திற்கும் இடம் கிடையாது. திராவிட முன்னேற்ற கழகம் மிகப் பெரிய பிரச்னைகளை சந்தித்துக் கொண்டு இருக்கும் போது உட்கட்சி பிரச்னை பற்றி யாரும் பேசுவது நாகரிகமாக இருக்காது.
மிகப் பெரிய தலைவரை இழந்து நிற்கிறார்கள்- குடும்பத்தில் அனைவரும் சேர்ந்து மீண்டு வர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.
கருணாநிதி அஞ்சலி நிகழ்ச்சிக்கு அமித் ஷா வருவதற்கு வாய்ப்புகள் குறித்த கேள்விக்கு 70 ஆண்டு காலம் மக்களுக்காக பணியாற்றியவர். அதை கொச்சை படுத்த வேண்டாம் – எதற்கெடுத்தாலும் கூட்டணி என கூற முடியாது என்று கூறினார்.




