தமிழக சட்டமன்றக் கூட்டம் துவங்கியது: ஆளுநர் கே.ரோசய்யா உரை

சற்றுமுன்

சென்னை தமிழக சட்டப் பேரவைக் கூட்டம் இன்று காலை தமிழக ஆளுநர் கே.ரோசய்யா உரையுடன் தொடங்கியது. தமிழக ஆளுநர் கே.ரோசய்யா தனது உரையில்… தமிழக அரசு ஏழை, எளிய மக்களின் நலன் காக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு, மத நல்லிணக்கம் பேணப்படுவதற்கு பாராட்டுகள். ரூ.43.98 கோடியில் தமிழ்ப் பல்கலைக்கழகம், மதுரை தமிழ்ச் சங்கக் கட்டடம் கட்டப்படுகிறது. மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுத்ததற்கு பாராட்டுகள். கச்சத் தீவை மீட்டால்தான் மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பெற முடியும். ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள் – என்று தெரிவித்தார். இதனிடையே எதிர்க்கட்சிகளான திமுக, புதிய தமிழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.