திருச்சி பொது மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததாக பீதி!

உள்ளூர் செய்திகள்

oxygen-cylinderதிருச்சி: திருச்சி சிந்தாமணி மகாத்மா காந்தி அரசு பொதுமருத்துவ மனையில் இன்று காலை ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததாக பீதி கிளம்பியது. இதனால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது. அரசு மருத்துவமனையில் ஒரு வயது முதல் 7 வயது வரையிலான குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் 11 மணிக்கு அவசர சிகிச்சைக்குத் தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டரை ஊழியர்கள் மாற்றும் போது அதில் இருந்து திடீரென அதிக சத்தத்தில் புகையுடன் கூடிய வாயு வெளியேறியது. புகை அதிகமாக இருந்ததால், சிலிண்டர் வெடித்ததாக பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. உடனே, குழந்தைகள் பிரிவுக்கு வெளியே இருந்த சிலர், உள்ளே சிலர் சிக்கிக் கொண்டதாக நினைத்து, அந்த அறையின் கண்ணாடியை உடைத்து காப்பாற்ற முயன்றனர். அப்போது, மருத்துவமனை அறையின் உள்ளே இருந்த ரங்கராஜ் மனைவி செல்வி (25) என்பவருக்கு கண்ணாடி பட்டு காயம் ஏற்பட்டது. மேலும், குழந்தைகள் 3 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.