500x300 1727375 admk head office 3 - 2026

அதிமுக அலுவலக வன்முறை: ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு சம்மன்..

சற்றுமுன்

அதிமுக அலுவலக வன்முறை சம்பவங்கள் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கு சென்னை ராயப்பேட்டை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

500x300 1727375 admk head office 3 - 2026

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்றுவது தொடா்பாக எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் ஓ.பன்னீா் செல்வம் ஆதரவாளா்களிடையே கடந்த திங்கள்கிழமை மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் மாறி,மாறி கற்களாலும்,உருட்டு கட்டைகளாலும் தாக்கிக் கொண்டனா். இந்த மோதலில் 2 போலீஸாா் 50-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இரு பேருந்துகள் உள்பட 14 வாகனங்கள் சேதமடைந்தன. இதன் காரணமாக வருவாய்த்துறையினா் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்தனா். 

வன்முறைத் தொடா்பாக 7 பிரிவுகளில் 400 போ் மீது ராயப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக 14 போ் கைது செய்யப்பட்டனா். அதேவேளையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு கொடுத்த புகாரின் பேரில், ஓ.பன்னீா் செல்வம் தரப்பு மீது ஒரு வழக்கும், ஓ.பன்னீா் செல்வம் தரப்பு கொடுத்த புகாரின் பேரில் எட்பாடி பழனிசாமி தரப்பு மீது ஒரு வழக்கும் போலீஸாா் பதிவு செய்துள்ளனா். வன்முறையில் தொடா்புடையவா்களை கைது செய்ய 3 உதவி ஆணையா்கள் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில அதிமுக அலுவலக வன்முறை தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கு சென்னை ராயப்பேட்டை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அதில் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 15க்கும் மேற்பட்டோர் நாளையும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் நாளை மறுநாளும் ஆஜராக வேண்டும என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.