152726 - 2026

விருதுநகர்-மேம்பாலத்தில் இருந்து விழுந்து இருவர் பலி..

சற்றுமுன்

விருதுநகரில் மேம்பால பக்கவாட்டுச் சுவரில் இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.


விருதுநகர் ஆனைக் குழாய் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (28), எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்தார். . இவரும் அதே பகுதியை சேர்ந்த பெயிண்டர் சிவக்குமார் (50) என்பவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். வண்டியை பிரபாகரன் ஓட்டினார். விருதுநகர்-அருப்புக்கோட்டை சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் சென்றபேது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் பாலத்தில் பக்கவாட்டுச் சுவர் மீது மோதியது. இதி இருவரும் மேம்பாலத்தில் இருந்து கீழே உள்ள சேவைச் சாலையில் விழுந்தனர்.

இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, அக்கம்பக்கத்தினர், இருவரையும் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அங்கு இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து சிவக்குமாரின் மனைவி ராணி விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

152726 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.