
4 கோடி மதிப்புள்ள சொத்தை 40 லட்சம் என காட்டி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தென் மண்டல காவல்துறை தலைவரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது:
மதுரை அருகே திருமங்கலத்தைச் சேர்ந்த வினோத்குமார், தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் அவர்களிடம் அளித்த புகார் மனுவில் சாத்தங்குடியைச் சேர்ந்த
துரைபாண்டி, விருதுநகரை சேர்ந்த ஜெயராஜ் ஆகியோர் திருமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் மோசடியாக நாலு கோடி மதிப்புள்ள சொத்தை, 40 லட்சம் என மதிப்பீடு செய்து பத்திரப்பதிவு செய்துள்ளனர்.
ஆனால் 4 கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்களும் உள்ளது . இதனால், அரசுக்கு பத்திரப்
பதிவுத்துறைக்கு மற்றும் வருமான வரித்துறையினருக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நான் புகார் மனு அனுப்பியதால், என் மீது 20 கோடி ரூபாய் மோசடியாக பத்திரப்பதிவு செய்ததாக தென் மண்டல காவல்துறை அலுவலகத்தில் அடிப்படை முகாந்திரமற்ற புகார் கொடுக்கப் பட்டுள்ளது.
எனவே, மோசடியாக பத்திரப்பதிவு செய்த பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும், என் மீது மோசடியாக பொய் புகார் கொடுத்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மனுவில் தெரிவித்துள்ளார்.