fifa world cup 2022 - 2026

உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2022: மூன்றாம் இடம் பெற்ற குரேஷியா!

விளையாட்டு Featured உலகம் சற்றுமுன்
fifa world cup 2022 - 2026

-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

உலகக்கோப்பை கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளை இறுதிப்போட்டி நடக்கவுள்ள நிலையில், இன்று மூன்றாம் இடத்துக்கான ஆட்டம் நடைபெற்றது.

இதில் அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினா அணியிடம் தோல்வியடைந்த குரேஷியா அணியும், மற்றொரு அரையிறுதியில் பிரான்ஸ் அணியிடம் தோல்வியடைந்த மொராக்கோ அணியும் மோதின. அதுமட்டுமல்லாமல் குரேஷியா அணியின் கேப்டன் மோட்ரிச்சின் கடைசி உலகக்கோப்பை என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்தது.

காயம்பட்ட சிங்கத்தின் கர்ஜனை எப்படி இருக்கிறது என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். இதனிடையே ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடம் முதலே ஆட்டத்தில் பரபரப்ப ஏற்பட்டது. இரு அணி வீரர்களும் முதல் கோல் அடிக்கத் தீவிரமாக இருந்தனர்.

அதற்கேற்ப ஏழாவது நிமிடத்தில் குரேஷியா அணிக்கு ஃபிரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. அதில் ‘மோட்ரிக்’ அடித்த ஃபிரீ கிக்கில், இளம் குரேஷிய வீரர் ‘குவார்டியோல்’ ஹெட்டர் மூலம் கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் குரோஷியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

ஆனால் இதற்கு மொராக்கோ அணி அடுத்த நிமிடத்திலேயே பதிலடி கொடுத்தது. மொராக்கோ கொடுத்த பதிலடி ‘அச்ரஃப் டாரி’ ஆட்டத்தின் ஒன்பதாவது நிமிடத்தில் மொராக்கோ அணிக்காக முதல் கோலை அடித்து அசத்தினார். இதன் மூலம் ஆட்டத்தில் 1-1 என்ற நிலை ஏற்பட்டது. இதன் பின்னர் இரு அணி வீரர்களும் தடுப்பாட்டத்தில் எச்சரிக்கையாக ஆடினர். இருந்தும், 42ஆவது நிமிடத்தில் குரேஷியா அணியின் ‘மிஸ்லவ் ஓர்சிக்’ கோல் அடித்து அசத்தினார். இதனால் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணியின் கைகள் ஓங்கியது.

இதன் பின்னர் முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. தடுப்பாட்டம் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தொடர் முயற்சிகளை மேற்கொண்டனர்.

ஆனால் மொராக்கோ அணியின் தடுப்பாட்ட வீரர்கள் குரேஷியா முன்கள வீரர்களையும், குரேஷியா அணி தடுப்பாட்ட வீரர்கள் மொராக்கோ அணியையும் தடுத்து நிறுத்தினர். 70 நிமிடங்கள் கடந்தும் ஆட்டம் ஆட்டம் 2-1 என்ற கோல் கணக்கிலேயே சென்றது.

தவறிய வாய்ப்புகள் தொடர்ந்து 75ஆவது நிமிடத்தில் மொராக்கோ அணியின் ‘என்நெசரி’ கோல் அடிக்க எடுத்த முயற்சியை, கடைசி நிமிடத்தில் குரேஷியா அணியின் ‘குவார்டியோல்’ தடுத்து நிறுத்தினர். இதன்பின்னர் ஆட்டம் மேலும் பரபரப்பானது. பின்னர் 87ஆவது நிமிடத்தில் குரேஷியா அணிக்கு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் குரேஷியா வீரர் ‘ஸ்டானிசிக்’ வாய்ப்பைத் தவறவிட்டார். தொடர்ந்து 89ஆவது நிமிடத்தில் கிடைத்த ஃபிரீ கிக் வாய்ப்பையும் குரேஷியா அணி தவறவிட்டது.

90 நிமிடங்கள் முடிவடைந்தும், கூடுதலாக 6 நிமிடங்கள் வழங்கப்பட்டது. ஆனால் அந்த நேரத்திலும் எந்த கோலும் அடிக்கப்படவில்லை. இதனால் 2-1 என்ற கோல் கணக்கில் குரேஷியா அணி வெற்றிபெற்றது. இதன் மூலம் ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடரை குரேஷியா அணி மூன்றாவது இடத்தைப் பெற்றது.

பரிசுத்தொகை

உலகக் கோப்பை கால்பந்துத் தொடரில் சாம்பியன் கோப்பையை தட்டிச்செல்லும் அணிக்கு இந்திய மதிப்பில் ரூ 342 கோடி பரிசாக கிடைக்கும். இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ 244 கோடியும், மூன்றாவது மற்றும் நான்காவது இடம் பிடிக்கும் அணிக்கு முறையே ரூ 219 கோடியும்,ரூ 203 கோடியும் பரிசாக வழங்கப்படும்.

அதேபோல் கால் இறுதியுடன் வெளியேறும் 4 அணிகளுக்கும் தலா ரூ 138 கோடியும், இரண்டாவது சுற்று போட்டிகளான நாக்அவுட் ஆட்டங்களுடன் வெளியேறும் 8 அணிகளுக்கு தலா ரூ 105 கோடியும், லீக் சுற்றோடு வெளியேறும் 16 அணிகளுக்கு தலா ரூ 73 கோடியும் பரிசாக வழங்கப்படும்.

இந்த ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கான மொத்த பரிசுத்தொகை ரூ. 3,586 கோடியாக உள்ளது. இது கடந்த முறையை விட ரூ.328 கோடி கூடுதல் ஆகும். கடந்த 2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ரூ.3,258 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.