எந்த குழப்பமும் வேண்டாம் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு இப்படி செய்யுங்க!

Published:

brinjal - 2026எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு!

தேவை:
பிஞ்சுக் கத்திரிக்காய்             – 1/4 கிலோ,
புளி                                      -எலுமிச்சம் பழ அளவு,
எண்ணெய், உப்பு                  – தேவைக்கு,
பெங்களூர் தக்காளி              – 2,
கடுகு, கறிவேப்பிலை          – தாளிக்க,
உரித்த சின்ன வெங்காயம்  – 15.

அரைக்க:
தேங்காய்                              – 1/2 மூடி துருவியது,
காய்ந்த மிளகாய்                   – 5,
சீரகம்                                    – 1 டீஸ்பூன்,
வெந்தயம்                             – 1/2 டீஸ்பூன்,
மல்லித்தூள்                           – 2 டீஸ்பூன்.ooil brinjal 1 - 2026செய்முறை:
கத்திரிக்காயைக் காம்பை நீக்கி, நீளவாக்கில் நான்காக முக்காய் காய்வரை நறுக்கிக் கொள்ளவும். அரைக்க வேண்டிய பொருட்களை, 2 கரண்டி எண்ணெய் விட்டு வறுத்து ஆறியதும், இரண்டு பெங்களூரு தக்காளிச் சேர்த்து அரைக்கவும். கடாயில் இரண்டு கரண்டி எண்ணெய் விட்டு, கத்திரிக்காயை நன்கு வதக்கி எடுக்கவும். கடுகு, கறிவேப்பிலைத் தாளித்து அத்துடன் சின்ன வெங்காயத்தை வதக்கவும்.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

பிறகு புளிக்கரைசல், கத்திரக்காய், அரைத்த விழுது கலந்து, சிறிது கெட்டியாகும் வரை கொதிக்க விடவும். தேவைப்படுவோர் நெல்லிக்காய் அளவு வெல்லம் சேர்க்கவும். சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். சுவை அள்ளும்.

 

 

 

 

 

 

 

 

 

 

Related articles

Recent articles

spot_img