images 2023 01 06T202739.538 - 2026

தாயை அடித்துக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை..

உள்ளூர் செய்திகள்
images 2023 01 06T202739.538 - 2026

தாயை அடித்துக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது

விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூர் அங்குள்ள மூளிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி என்ற ராஜா வயசு 30 இந்த குருசாமி என்ற ராஜா அடிக்கடி அவரது அம்மா சுப்புலட்சுமி என்ற சுப்பு தாயிடம் பணம் கேட்டு தகராறு செய்வாராம் அதேபோல்

கடந்த 11/4/ 2019 அன்று வழக்கம்போல் தனது தாய் சுப்புலட்சுமி என்ற சுப்பு தாயிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார் சுப்புத்தாய் பணம் தர மறுக்கவே ஆத்திரத்தில் அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து தாயரை தாக்கி உள்ளார் இதில் சுப்புத்தாய் பரிதாபமாக இறந்தார் இந்த கொலை தொடர்பாக

வந்த புகார் என அடிப்படையில் ஆமத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குருசாமி என்ற ராஜாவை கைது செய்தனர் மேலும் இது தொடர்பான வழக்கு திருவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி பகவதி அம்மாள் பணம் தர மறுத்த தாயை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற மகன் குருசாமி என்ற ராஜாவிற்கு ஆயுள் தண்டனையும் 2,500 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

தாயை அடித்துக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.