
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில், பேர் வேண்டுமா, நீர் வேண்டுமா என்று பாஜக., தமிழக தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரம் மக்களின் உணர்வு பூர்வமான பிரச்னையாக மாறியுள்ள நிலையில், ஏதோ நகைச்சுவையாகப் பேசுவது போல், பேர் வேண்டுமா, நீர் வேண்டுமா என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று அரியலூர் அருகே வி. கைகாட்டியில் பாஜகவின் மாவட்ட விவசாய அணி அலுவலகத்தை திறந்து வைத்தார் தமிழிசை. அதன் பின்னர் செய்தியாளர்களுடன் பேசினார்.
அப்போது காவிரி மேலாண்மை வாரியம் நிச்சயம் அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், பெயரில் ஒன்றும் இல்லை, நீரில்தான் பிரச்னை என்று குறிப்பிட்டார்.



