
தமிழகத்தில் உள்ள அனைத்து சம்பளக் கணக்கு அலுவலகங்களுக்கும் 31ஆம் தேதி வேலை நாள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து சம்பள கணக்கு அலுவலகங்கள், மாவட்ட கருவூலங்கள், சார்நிலை கருவூலங்களுக்கு மார்ச் 31 ஆம் தேதி வேலை நாளாகச் கருதப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2017-18ம் நிதியாண்டு வரும் 31ல் முடிவடைவதால் பட்டியல்களை நேர் செய்வதற்காக வேலை நாளாக அறிவித்துள்ளது தமிழக அரசு.



