1125040 evks 1 - 2026

ஈரோடு இடைத்தேர்தல் 80 மனுக்கள் ஏற்பு,41 மனு நிராகரிப்பு..

கோவை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் 80 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் இன்று தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவையடுத்து அங்கு வருகிற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ். தென்னரசு, தேமுதிக சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழா் கட்சி சார்பில் மேனகா உள்ளிட்டோர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இடைத்தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் ஈரோட்டில் உள்ள தொகுதியில் பிரசாரத்தை தொடங்கி உள்ளது. இந்தநிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனு பரிசீலனை நிறைவு பெற்றது. 121 வேட்புமனுக்கள் பரீசிலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் 80 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாகவும் 41 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஈரோடு மாநகராட்சி ஆணையாளரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவக்குமார் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

1125040 evks 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.