சேலம்: சேலம் மாவட்டம் அரிசிப்பாளையத்தை சேர்ந்தவர்கள் ஜெயராணி, கவிதாஸ்ரீ. இவர்கள் தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தனர். இவர்களை நேற்று மாலை முதல் காணவில்லை என்று பெற்றோர், பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், இன்று 4 மாடிக் கட்டடத்தில் இருந்து இருவரும் குதித்தனர். இதில் ஜெயராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கவிதாஸ்ரீ படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சேலத்தில் பள்ளி மாணவிகள் இருவர் தங்கும் விடுதியின் 4வது மாடியில் இருந்து குதித்ததில் ஒரு மாணவி உயிரிழந்தார். மற்றொரு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சேலம் சின்னகடை வீதியில் ஸ்ரீ சரவண பவன் உணவகம் மற்றும் தங்கும் விடுதி உள்ளது. தற்போது அந்த தங்கும் விடுதி பயன்பாட்டில் இல்லாமல் பூட்டி வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை அந்தத் தங்கும் விடுதியின் நான்காவது மாடியில் மாணவிகள் இருவர் நின்று கொண்டிருந்ததைக் கண்ட அருகிலிருந்த வியாபாரிகள், பொதுமக்கள் மாணவிகளை கீழே இறங்குமாறு கூச்சலிட்டனர். ஆனால் அந்த இரு மாணவிகளும் தீடிரென கட்டிடத்தின் 4வது மாடியில் இருந்து கீழே குதித்தனர்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த ஒரு மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மற்றொரு மாணவியை அங்கிருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் மீட்டு, சேலம் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து வந்த போலீசார், நடத்திய விசாரணையில் உயிரிழந்த மாணவியின் பெயர் ஜெயராணி என்பதும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர் சங்கர் நகரைச் சேர்ந்த கவிதாஸ்ரீ என்றும் தெரியவந்தது. இருவரும் சேலம் நான்குரோடு பகுதியில் உள்ள செயிண்ட் மேரீஸ் பள்ளியில் படித்து வந்ததும், இருவரும் ஏற்கனவே ஒரு முறை தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது.
உயிரிழந்த மாணவி ஜெயராணியின் தாயார் இரு மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். இதனால் மன உளைச்சலோடு காணப்பட்ட ஜெயஸ்ரீ, தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து அதனை கவிதாஸ்ரீயிடம் கூறியுள்ளார். தோழியை பிரிய மனமில்லாத கவிதாஸ்ரீ தனும் தற்கொலை செய்துகொள்வதாகக் கூறி, தங்கும் விடுதியில் மேல் மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் இருவரும் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இவர்களில் ஜெயராணி உயிரிழந்துள்ளார். கவிஸ்ரீதாக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



