IMG 20230222 WA0086 - 2026

விருதுநகர் அருகே அகழ்வாராய்ச்சி ஆயத்த பணிகள் மீண்டும் துவக்கம்..

உள்ளூர் செய்திகள்
IMG 20230222 WA0086 - 2026

விருதுநகர் அருகே வெம்பக்கோட்டையில் 2ம் கட்ட அகழ்வாராய்ச்சிக்கான ஆயத்த பணிகள் புதன் கிழமை துவங்கியது.

சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் 2ம் கட்ட அகழாய்வு நடத்த மத்திய அரசு கடந்த வாரம் அனுமதி வழங்கியுள்ளது

விரைவில் 2ம் கட்ட அகழாய்வு துவங்க உள்ள நிலையில் அதற்கான முன் ஆயத்த பணிகளை பூமி பூஜையுடன் புதன் கிழமை தொல்லியல் துறை துவங்கியுள்ளது.

IMG 20230222 WA0085 - 2026

அகழ்வாராய்ச்சி பணிகளுக்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அந்த இடங்களை சுத்தம் செய்தல், அகழாய்வு குழிகள் தோன்டுவதற்கு அளவீடு செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது

முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற முதலாம் கட்ட அகழாய்வில் சங்குவளையல்கள், கண்ணாடி மணிகள், யானை தந்தால் செய்யப்பட்ட அணிகலன், சுடுமண்ணால் ஆன தொங்கட்டான், பகடைக்காய் உள்ளிட்ட 3,254 பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

சங்கு வளையல் தயாரிப்பு கூடம் இருந்ததற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது

இங்குள்ள மக்கள் வெளி நாடுகளில் கடல்வழி வாணிபம் செய்ததற்காண சான்றாக பல்வேறு பழமையான பொருட்கள் கண்டறியப்பட்ட நிலையில் அதன் தொடர்ச்சியை 2ம் கட்ட அகழாய்வில் அறிய முடியும் என்பதால் 2ம் கட்ட அகழாய்வு தொல்லியல் ஆர்வலர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.