pournami poojai in sellandipalayam kaval therivam - 2026

காவல் தெய்வத்துக்கு ஐப்பசி பௌர்ணமி சிறப்பு அபிஷேகம்!

ஆன்மிகச் செய்திகள் திருச்சி லைஃப் ஸ்டைல் விழாக்கள் விசேஷங்கள்
pournami poojai in sellandipalayam kaval therivam - 2026
#image_title

டி. செல்லாண்டிபாளையம் சாலையில் உள்ள காவல் தெய்வத்திற்கு ஐப்பசி மாத பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட டி. செல்லாண்டிபாளையம் பகுதியில் சாலையில் குடிகொண்டு நூதன முறையில் அருள்பாளித்து வரும் காவல் தெய்வத்திற்கு இன்று ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், தேன், நெய், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பெடி, அரிசி மாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதை தொடர்ச்சியாக காவல் தெய்வத்திற்கும், பெண் தெய்வத்திற்கும் பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சுவாமிக்கு சிவாச்சாரியார் உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார்.

அதை தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

கரூர் டி செல்லாண்டிபாளையம் சாலையில் அருள் பாலிக்கும் காவல் தெய்வத்திற்கு நடைபெற்ற ஐப்பசி மாத பௌர்ணமி அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.