மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி… தீர்ப்பை வரவேற்போம்: விஜயகாந்த்!

உள்ளூர் செய்திகள் சென்னை லைஃப் ஸ்டைல்
vijayakanth 12 600 01 1504279982 - 2026

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவரும் பொதுச்செயலாளருமான விஜயகாந்த் அயோத்தி வழக்கு தீர்ப்பு குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அதில், பல வருடங்களாக எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி வழக்கு தீர்ப்பு அனைத்து மதத்தினராலும், அனைவராலும் வரவேற்கக்கூடிய ஒரு தீர்ப்பாக இருக்கிறது.

எனவே இந்த தீர்ப்பை நாம் அனைவரும் மதநல்லிணக்கத்தை மனதில் கொண்டு வரவேற்போம். பொதுமக்களுக்கும், பொது உடமைகளுக்கும் எந்தவித அசம்பாவிதமும் நடக்காத வகையில் மத்திய, மாநில அரசுகள் கவனமாக இருந்து பார்த்துக்கொள்ள வேண்டும்.

மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி இந்த தீர்ப்பை நாம் மதிப்போம், வரவேற்போம்… என்று தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.