railway news - 2026

தேவை தீபாவளி சிறப்பு ரயில்கள்!

மதுரை சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
railway news - 2026
#image_title

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையின் போது, பலரும் சொந்த ஊர் செல்வார்கள். அவர்களின வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு முன் கூட்டியே சிறப்பு ரயில்கள் இயக்கம் குறித்து தென்னக இரயில்வே அறிவிக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் அதிகம் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகளில் ஒன்றாக தீபாவளி பண்டிகையும் ஒன்றாகும் தமிழகத்தின் தென் மாவட்டத்தை சேர்ந்த பெரும்பாலான பயணிகள் சென்னையிலேயே அதிகம் வசிக்கின்றனர். இவர்கள் தீபாவளி பண்டிகையின் போது, பலரும் சொந்த ஊர் செல்வார்கள்.

அவர்களின வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 95 சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த முறை நவம்பர் 8ம் தேதி ஞாயிறு அன்று தீபாவளி பண்டிகை வருகிறது. எனவே பலரும் வெள்ளிக்கிழமை அல்லது வியாழக்கிழமை சொந்த ஊர் செல்வார்கள். இறுதியாக சனிக்கிழமையும் சொந்த ஊர் செல்வார்கள். எனவே அவர்களின் வசதிக்காக இந்த 3 நாட்களில் அதிகப்படியான ரயில்கள் இயக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இதற்கான அறிவிப்பு தென்னக ரயில்வே முன்கூட்டியே அறிவித்து முன்பதிவு துவக்க வேண்டும். ஆயுத பூஜை பண்டிகை வரும் திங்கள் அன்று கொண்டாடப்பட உள்ளது.

இதற்காக பலரும் சொந்த ஊர் செல்ல தயாராகி வருகிறார்கள். இவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இன்று தென்னக ரயில்வே பெங்களூரு தூத்துக்குடி தாம்பரம் செங்கோட்டை ஈரோடு தாம்பரம் திருநெல்வேலி சென்னை சென்ட்ரல் கொல்லம் சென்னை நாகர்கோவில் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது இந்த ரயில்கள் நாளை முன்பதிவு துவங்க உள்ள நிலையில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அடுத்ததாக தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது. வரும் நவம்பர் 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து சுமார் 8 முதல் 10 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கமாக உள்ளது.

இவர்களின் முதல் தேர்வு ரயில் பயணமாக இருக்கிறது. ரயில் டிக்கெட் முன்பதிவை பொறுத்தவரை 60 நாட்களுக்கு முன்பே தொடங்கிவிடும். தட்கலில் டிக்கெட் பெறுவது என்பது சமானிய மக்களுக்கு சிரமமாக இருக்கிறது.

இதனால் தீபாவளி பண்டிகை இன்னும் சில வாரங்களில் வர உள்ள நிலையில் இந்த மாத மத்தியில் இருந்து சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

தாம்பரத்திலிருந்து தென்காசிக்கு பகல் நேர அதிவிரைவு ரயில் கடந்த மாதம் இயக்கப்பட்டது பயணிகளிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த ரயிலை வாரம் இருமுறை சிறப்பு ரயில்களாக தீபாவளிக்கு இயக்கவும் சென்னை எக்மோரில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் இயக்கவும் பெங்களூரில் இருந்து மதுரை விருதுநகர் ராஜபாளையம் தென்காசி திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் இயக்கவும் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.