விஸ்வாசத்தால் மகிழ்ந்த தல ரசிகர்கள்!

Published:

viswasam - 2026

நடிகர் அஜீத்தின் விஸ்வாசம் திரைப்படம் இந்திய அளவில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரையில் இந்திய அளவில் அதிகம் டிரண்ட் ஆன #HASHTAG பட்டியலில் #Viswasam ஹேஷ்டேக் முதலிடத்தை பிடித்துள்ளதாக ட்விட்டர் நிறுவனம் கூறியுள்ளது. 2019-ம் ஆண்டு பொதுத்தேர்தல், 2019-ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆகிய #HASHTAG-குகளை பின்னுக்கு தள்ளி விஸ்வாசம் #HASHTAG முதலிடம் பிடித்துள்ளது.

viswasam tw - 2026

அஜித்-சிவா கூட்டணி நான்காவது முறையாக இணைந்த ‘விஸ்வாசம்‘ திரைப்படம் கடந்த பொங்கல் அன்று வெளியானது. அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ சங்கர் என மிகப்பெரிய நடிகர் பட்டாளத்தை கொண்ட இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார். தந்தை மகள் பாசத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. இப்படம் பாடல்கள், டிரைலர், டீசர் ஆகியவை யூடியூப்பில் சாதனை படைத்தது.

ALSO READ:  சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!
ajith 3 - 2026

தற்போது ட்விட்டரில் விஸ்வாசம் சாதனை படைத்துள்ளது. 2019ம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை ட்விட்டரில் அதிக ஹேஷ்டேக் பயன்படுத்திய பெயர்கள் வெளியாகியுள்ளது. இதில் முதல் இடத்தில் விஸ்வாசம் பிடித்துள்ளது. இதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Related articles

Recent articles

spot_img