தாய்குலத்திற்காக தல எடுத்த அதிரடி முடிவு!

Published:

ajith 2 - 2026

பெண்களை தரக்குறைவாக கிண்டல் செய்யும் கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என்று நடிகர் அஜீத் கூறியிருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் அஜித்குமாருக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர். மகளின் பெயர் அனோஷ்கா. இந்த பொங்கலுக்கு வெளியான “விஸ்வாசம்” திரைப்படம் அவருக்கு பெரும் வெற்றியை பெற்றுத்தந்தது. அனைவரிடமும் வரவேற்பைப் பெற்ற அந்தப்படம் அவருடைய மகளுக்கு மிகவும் பிடித்திருந்தாம்..

ajith daughter - 2026

நடிகர் அஜித்குமார் நடித்து சமீபத்தில் வெளியான “நேர்க்கொண்ட பார்வை” திரைப்படத்தில் அவர் மாறுபட்ட தோற்றத்தில் நடித்திருந்தாலும், அந்தப்படம் மாபெரும் வசூலை அடைந்தது. இந்தப் படத்திலும் பெண்களை காப்பாற்றும் கதாபாத்திரத்தில் அஜித்குமார் நடித்திருந்தார்.

அந்த படத்தை பார்த்த அனைவரும் அஜித் கதாபாத்திரத்தை பாராட்டினார்கள். அனைத்து ஹீரோக்களும் தங்களின் கெரியரில் ஒருமுறையாவது நேர்கொண்ட பார்வை போன்ற படத்தில் நடிக்க வேண்டும் என்று விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் கூட தெரிவித்திருந்தார்.

nkp 3 - 2026

இந்தப்படமும் வெற்றி அடைந்ததால் இயக்குநர்களிடம் இனி பெண்களை இழிவுபடுத்தினால் கதாபாத்திரங்களில் தான் நடிக்கப்போவதில்லை என்று கடுமையாக முன் வைத்துள்ளார் அஜித் .ஹீரோக்கள் பெண்களை கிண்டல் செய்யவில்லை என்றாலும், அவர்களது நண்பர்களாக வரும் காமெடி நடிகர்கள் பெண்களை கிண்டல், கேலி செய்துக் கொண்டிருப்பார்கள். அதுபோன்ற காட்சிகள் கூட தனது படங்களில் இருக்க கூடாது, என்று இயக்குநர்களிடம் அஜித், கண்டிப்புடன் சொல்லிவிடுகிறாராம்.

viswasam - 2026

அஜித் தன்னுடைய அடுத்த திரைப்படத்தை இயக்குநர் ஹெச்.வினோத்தின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் அஜித்குமார் காவல்துறை அதிகாரியாக வலம் வரப்போவதாக கூறப்படுகிறது. வழக்கமாக “சால்ட் அன்ட் பெப்பர்” ஹேர்ஸ்டைலில் வரும் அஜித், இந்த முறை முழுவதும் இளமையாகவே நடிக்க உள்ளதாக கூறப்படுகின்றது.

ALSO READ:  வித்யா ததாதி விநயம்! பணிவே வெற்றியாளரின் உன்னதப் பண்பு!
thala 1 - 2026

இந்த திரைப்படத்திற்காக அஜித்தின் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். அஜித்தின் 60 வது படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை

அஜித் நிபந்தனை விதிப்பதை பார்த்தால் பெண்களை கேலி, கிண்டல் செய்வதற்கு பெயர் போன அந்த இயக்குநரின் படத்தில் நடிக்க மாட்டார் என திரையுலகில் கூறப்படுகிறது. அந்த இயக்குநர் படத்தில் ஹீரோவும், காமெடியனும் சேர்ந்து பெண்களை கிண்டல் செய்வது தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதை பலரும் எதிர்த்தும் அந்த இயக்குநர் திருந்தவில்லை.

Related articles

Recent articles

spot_img