மாடல் அழகிக்கு நேர்ந்த கொடூரம் ! வயிற்றுவலி என்று மருத்துவமனை சென்றவர்..?

உலகம் புகார் பெட்டி பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
rashya model - 2026

மாடல் அழகியை கொலை செய்து அவருடைய கர்ப்பப்பையை திருடப்பட்ட சம்பவமானது துருக்கியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய நாட்டை சேர்ந்தவர் சோபியா. இவருடைய வயது 16. இவர் ரஷ்யாவில் மாடலிங் செய்து கொண்டிருந்த அழகிய பெண். தன்னுடைய விடுமுறை நாட்களை தன் குடும்பத்தினருடன் செலவழிக்க திட்டமிட்டு, துருக்கி நாட்டிற்கு சுற்றுலா சென்றார்.
.
துருக்கி சென்ற சில நாட்களிலேயே அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்து பார்த்தபோது, அவருக்கு கடுமையான குடல் அழர்ச்சியிருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்து கூறியுள்ளனர்.

அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை செய்வதற்காக பெற்றோரிடம் அனுமதி பெற்றுள்ளனர். 8 மணி நேரமாக அறுவை சிகிச்சை செய்தனர். அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இறந்து போன சோபியாவின் உடலை ரஷ்ய நாட்டில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியபோது கர்ப்பப்பை உள்ளிட்ட சில முக்கிய உறுப்புகள் அவர் உடலில் காணவில்லை.

rashya - 2026

இதனை சோபியாவின் தந்தையிடம் கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சோபியாவின் தந்தை தன் மகளின் உடல் உறுப்புகளை திருடி விற்கப்பட்டுள்ளதாக புகார் எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் துருக்கி நாட்டின் அதிபரான ரெசெப் எர்கடானுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் சோபியாவின் இறப்பு அறிக்கையானது முழுவதுமாக செப்டம்பர் மாத தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவமானது ரஷ்ய நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.