ragul 9 - 2026

காஷ்மீர் சென்ற ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவா்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனா்.

ஜம்மு-காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்த்தை மத்திய அரசு ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சட்டப்பேரவை உடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக்கை தனி யூனியன் பிரதேசமாகவும் அறிவித்தது.

இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பின் காஷ்மீரில் பல கட்டுப்பாடுகளும் விதிகப்பட்டன.

kulam nabi - 2026

இந்நிலையில் காஷ்மீர் நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக அங்கு சென்ற ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவா்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனா்.

Trichi seva 1 - 2026

ராகுல்காந்தி தலைமையில் 12 தலைவா்கள் டெல்லியிலிருந்து ஸ்ரீநகருக்கு புறப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனா்.

ராகுல்காந்தியுடன் குலாம்நபிஆஷாத், திமுக கட்சியின் சார்பில் திருச்சி சிவா ஆகியோரும் சென்றனா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending