உடல் பரிசோதனை அவசியம் : அமிதாப் பச்சன் !

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
amihtap 1 1 - 2026

இந்திய சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் அமிதாப்பச்சன் தனது கல்லீரல் 75 சதவீதம் பாதிப்படைந்துள்ளதாகவும், எஞ்சியுள்ள 25 சதவீதத்தை வைத்தே தான் உயிர் வாழ்வதாகவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

1983-ம் ஆண்டு வெளியான கூலி திரைப்படத்தின் படபிடிப்பின் போது ஏற்பட்ட காயத்திற்காக அமிதாப்பச்சனுக்கு ரத்தம் ஏற்றப்பட்ட போது, ஹெபடடைஸ் பி பாதிக்கப்பட்ட ஒருவரின் ரத்தம் ஏற்றப்பட்டதால் அவருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது

முன்னணி கதாநாயகிகளாக இருந்த மனிஷா கொய்ராலா, மம்தா மோகன்தாஸ், சோனாலி பிந்த்ரே ஆகியோரை புற்றுநோய் தாக்கியது. நடிகைகள் சிலர் உடல் நலம், மன நல பாதிப்புகளில் இருந்து மீண்டுள்ளனர்.

முன்னணி கதாநாயகிகளாக இருந்த மனிஷா கொய்ராலா, மம்தா மோகன்தாஸ், சோனாலி பிந்த்ரே ஆகியோரை புற்றுநோய் தாக்கியது. இதற்காக அவர்கள் சிகிச்சை எடுத்து குணமானார்கள். தீபிகா படுகோனே, ஆண்ட்ரியாவும் மன அழுத்தத்தில் இருந்து மீண்டதாக தெரிவித்தனர்.

amithap 3 - 2026

இந்த நிலையில் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனும் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தனியார் டெலிவிஷனில் கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று அமிதாப்பச்சன் பேசியதாவது:- “நான் காசநோய் பாதிப்பில் இருந்து தப்பி இருக்கிறேன். ஹெபடைடிஸ் பி பிரச்சினையில் இருந்தும் மீண்டேன்.

எனது சொந்த வாழ்க்கை அனுபவங்களை மற்றவர்களிடம் சொல்லி உடல் பரிசோதனை செய்துகொள்வது சம்பந்தமான விழிப்புணர்வுகளை பரப்பி வருகிறேன். எனது உடலில் தவறான ரத்தம் செலுத்தப்பட்டதால் கல்லீரல் 75 சதவீதம் பாதிக்கப்பட்டது.

மீதி 20 சதவீத கல்லீரலோடுதான் நான் வாழ்ந்து வருகிறேன். எல்லா நோய்களுக்குமே சிகிச்சை இருக்கிறது. எனக்கு காசநோய் பாதிப்பு ஏற்பட்டது கூட 8 வருடங்கள் வரை தெரியாது. எனக்கு வந்த இந்த பாதிப்பு மற்றவர்களுக்கும் வரலாம் என்று கூறி வருகிறேன். உடல் பரிசோதனைகள் செய்து கொள்ளவில்லை என்றால் இதுபோன்ற நோய் பாதிப்புகள் உங்களுக்கு எப்போதுமே தெரியாமல் போய்விடும். அதற்கான சிகிச்சையையும் பெற முடியாது.” இவ்வாறு அமிதாப்பச்சன் கூறினார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.