
விவேகம்
வேகமான திரைக்கதை பலம்… விவேகமற்ற கதை பலவீனம்..
சரி படத்தை பார்க்காமலே.. பார்த்தும் புரியாமலே இந்த படத்தில் கதையே இல்லை என கூறும் சிலருக்காக கதையை சொல்லிவிடுகிறேன் முதலில்..
AK எனும் அஜீத் ஒரு தேசிய உளவாளி… ஆங்கிலப்படங்களில் வரும் அசாத்திய ஹீரோக்களைப்போல திறமை வாய்ந்த ஓர் உளவாளி…
அவரோடு விவேக் ஓபராய் மற்றும் சிலர் என ஐந்து பேர் கொண்ட அணி…
இவர்களுக்கு ஒரு மிஷின் தரப்படுகிறது.. அதில் உலகத்தை அடிமையாக்க நினைக்கும் தீவிரவாதிகள் (இலுமினாட்டிகள்) நியூக்ளியர் வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருக்கின்றனர்…
இதனால் உலகமே பெரும் ஆபத்தை சந்திக்கும் என்கிற நிலையில் இந்த மிஷன் அஜித்தின் பணியாக வருகிறது…
அந்த நியூக்ளியர் வெப்பனை செயலிழக்கச்செய்யும் பாஸ்வேர்ட் அக்ஷராஹாசனுக்கு(நடாஷா) மட்டும்தான் தெரியும்….
இதனால் அவரையும் கண்டுபிடித்து அதனை செயலிழக்கச் செய்ய நினைக்கும் வேளையில் நடக்கும் அசம்பாவிதங்களும் அதில் அஜீத்திற்கு நடக்கும் பல துரோக சம்பவங்களும் அவற்றை எதிர்த்து அஜீத் எப்படி வெற்றி பெறுகிறார் என்பதே படத்தின் கதை…
ஆனாலும் இந்த கதையாக்கம் சரியா புரியுற மாதிரி மேக்கிங்கில் செய்யவில்லை என்பதே உண்மை..
மற்றபடி ஒரு சீன்கூட படத்தில் போரடிக்காது.. வேகமா நடக்குற பந்தயத்தை பார்க்கிற உணர்வு.. படத்தின் மிகப்பெரிய பலம் அஜீத்.. இந்த படத்துக்காக கடின உழைப்பை கொடுத்திருக்கிறார்.. அடுத்தது அனிருத்.. பாடல்கள் மனதில் பெரிதாக நிற்பதில்லை.. ஆனால் பிண்ணனி இசை அருமை.. அடுத்த பலம் அனைத்து சண்டைக்காட்சிகளுமே ஹாலிவுட் தரம்..
வெறும் சண்டைகள் மட்டும் இல்லை.. சென்டிமென்ட் சீன்களும் படத்தில் உண்டு.. காஜல் அகர்வாலுக்கு இந்த படம் நல்ல பெயர் தரும் கதாபாத்திரம்.. பெண்களுக்காக சில காட்சிகளில் ஹீரோயிசம் குறைக்கப்பட்டு ஹீரோயினிசம் ஏற்றப்பட்டுள்ளது இரண்டாம் பாதியில்..
படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் அஜீத் தனது டி-சர்டை கிழித்து சிக்ஸ்பேக் உடலுடன் சண்டையிடும் காட்சியில் இதற்கு முந்தைய படங்களில் பார்த்த அஜித்திற்கும் இந்த அஜீத்திற்கும் உள்ள நூறு சதவீத உழைப்பு தெரிகிறது..
மொத்தத்தில் ஒரு ஆங்கில படம் பார்த்த உணர்வு.. ஆனா தெளிவா எடுத்திருக்கலாமோன்னு தோன்றியது படத்தின் மைனஸ்.. கருணாகரனை வெச்சு சில காமெடி பண்ண ட்ரை பண்ணியிருக்காங்க அதெல்லாம் மரண ராவல்… நல்லவேள கொஞ்ச சீன்தான் வர்றாரு கருணாகரன் அதனால சகிச்சுக்கலாம்… ஆனால் வேதாளத்தோடு ஒப்பிடும்போது இது மிகச்சிறந்த படம்…
43/100 மார்க் தரலாம்…



