
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராக சுதேசி கப்பல் கம்பெனி துவங்கிய நாள் அக்டோபர் 16. இந்த நாள், இந்து வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் வணிகர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
மற்ற வணிகர் சங்கங்களெல்லாம் ஐரோப்பிய கலாச்சார அடிப்படையில் மே 5 வணிகர் தினமாக கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.
வணிகர் தினத்தை முன்னிட்டு இன்று காலை திருநெல்வேலி மாவட்ட இந்து வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் நெல்லை டவுனில் உள்ள வ உ சி மணிமண்டபத்தில் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பின்னர் இந்துமுன்னணி அலுவலகத்தில் வணிகர் தின விழா நடைபெற்றது.
இந்து வியாபாரிகள் நலச்சங்க மாவட்ட தலைவர் S.M.சங்கர் தலைமை தாங்கினார். இந்து முன்னணி மாநில பொது செயலாளர் நா.முருகானந்தம், இந்து வியாபாரிகள் நலசங்க மாநில தலைவர் வி.பி.ஜெயக்குமார், இந்துமுன்னணி மாநில செயலாளர் கா. குற்றாலநாதன்
ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
கூட்டத்தில் இந்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் இளங்கோ செந்தில், பாபு, வேல்.செந்தில், ஆரியங்கா, முத்தையா , லெட்சுமி நாராயணன், சங்கர் மாரியப்பன், அருள்ராஜ், பலவேசம் உட்பட இந்து வியாபாரிகள் நலச்சங்க பொறுப்பாளர்கள் மற்றும் வணிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

