“பெண் இப்போ ‘fit’ தானே”

ஆன்மிகம்

1380411_805270559515167_8265340876734836171_n தொகுத்தவர்-அழகர் நம்பி. தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

 
பெரியவாளிடம் திருமணப் பத்திரிக்கையை
சமர்ப்பித்து ஆசிகளைப் பெற்று திரும்பினர்
திருமண வீட்டார்.
 
தாலி கட்டுவதற்கு முன்பான அனைத்து
சடங்குகளையும் முடித்துக் கொண்டு
மேடைக்கு வந்தனர் மணமக்கள்.
 
திடீரென கல்யாணப் பெண்ணுக்கு வலிப்பு
வந்து விழுந்தாள்.
 
பெண் வீட்டாருக்கு பதற்றம். இதற்கு முன்
கல்யாணப் பெண்ணிற்கு இப்படி வந்ததில்லை.
இதுவே முதல் முறை. வலிப்புக்காரப் பெண்ணை, ஏமாற்றி நம்மிடம்
தள்ளி விடுகிறீர்களா? என்று சந்தேகம்
மாப்பிள்ளை வீட்டினருக்கு. மேற்கொண்டு திருமணம் நடக்காதா? என்ன ஆகும் என்ற எதிர்பார்ப்பு வந்தவர்களுக்கு.
 
இவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதாக
இருந்தது புரோகிதரின் வாக்கு. “காஞ்சிப் பெரியவாளுக்கு இவ்விபரத்தை தெரியப்படுத்துங்கோ.அவர்களின் ஆக்ஞைப்படி
மேற்கொண்டு செய்வோம்” என்றார். போன் மூலம் பெரியவாளுக்கு விபரம்
தெரிவிக்கப்பட்டது/ “பெண் வீட்டவாளின் குலதெய்வம்,பெண் தெய்வம்.
குல தெய்வத்திற்கு நேர்ந்து கொண்டு வேப்பிலையை
பெண்ணின் தலையில் வைக்கச்சொல்”என்றார்கள்
ஸ்வாமிகள். அப்படிச் செய்தவுடனே…..
 
பெண்ணும் மயக்கம் தெளிந்து எழுந்தாள். திருமணமும் நல்லவிதமாக முடிந்தது. பெரியவாளின் ஆசிக்காக மணமக்களை அழைத்து வந்தனர். பெரியவாளின் ஆசியால் திருமணம் நன்கு நடந்தேறியது என்றார்கள். “குலதெய்வத்தின் அருளாலே”என்றார்கள் 
பெண் இப்போ ‘fit’ தானே என்று சாதுர்யமாக பேசினார்கள் பெரியவா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.