தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தும் தெலுங்கு ஹீரோக்கள்

சினி நியூஸ் சினிமா

telugu - 2026கடந்த ஜனவரி மாதம் முதல் ரிலீஸ் ஆன தமிழ்ப்படங்களில் சுந்தர் சி இயக்கிய ‘கலகலப்பு 2’ படம் மட்டுமே விநியோகிஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளருக்கு லாபம் கொடுத்த படமாக கருதப்படுகிறது. மற்ற படங்கள் அனைத்தும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை

ஆனால் அதே நேரத்தில் மகேஷ்பாபுவின் பாரத் அனே நேனு, ராம்சரணின் ரங்குஸ்தலம் ஆகிய படங்கள் தமிழகத்தில் நல்ல வசூலை பெற்று விநியோகிஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது

இதனையடுத்து தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள் தமிழிலும் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக மகேஷ்பாபு, ஜூனியர் என்.டிஆர், ராம்சரண் தேஜா, அல்லு அர்ஜூன் ஆகியோரகளின் பார்வை தமிழை நோக்கியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.