இன்று பாடும் நிலா பாலு வுக்கு பிறந்தநாள். 1946 ஜூன் 4ம் தேதி பிறந்தவர் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன்.
ஆந்திர மாநிலம் நெல்லூரில் பிறந்தவர். எஸ் பி பாலசுப்ரமணியம் பாடும் வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தார்! முதன்முதலாக அவர் பாடியது சாந்தி நிலையம் படத்துக்காக ’இயற்கை என்னும் இளையகன்னி’ என்ற பாடல்தான்!
ஆனால் திரையில் முதன் முதலாக வந்தது அடிமைப்பெண் படத்தில் அவர் பாடிய ’ஆயிரம் நிலவே வா’ என்ற பாடல்தான்! இந்தப் பாடல் தான் அவருக்கு மிகப் பெரும் திருப்பத்தையும் புகழையும் ஏற்படுத்தி தந்தது!
இதுவரை 42 ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார்! தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஹிந்தி பெங்காலி ஒரியா மராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் எஸ் பி பாலசுப்பிரமணியம் பாடல்களை பாடியுள்ளார்!
துடிக்கும் கரங்கள் தொடங்கி 60 படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்! தெலுங்கு கன்னடம் தமிழ் என மூன்று மொழிகளில் 50 படங்களுக்கு மேல் இதுவரை நடித்திருக்கிறார்!
ஆறு தேசிய விருதுகள், பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகளையும் பெற்றுள்ளார்! மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு ஆந்திர மாநிலத்தின் தூதராக நியமிக்கப்பட்டு இருக்கும் பாடும் நிலா பாலு வின் பிறந்த தினம் இன்று..!




