December 6, 2025, 2:44 AM
26 C
Chennai

‘ஜெப உதவி மதமாற்ற வாசக’ மின் கணக்கீட்டு அட்டைகளை திரும்பப் பெற மின் வாரியம் உத்தரவு!

eb prachar christ pallikonda - 2025

ஜெப உதவிக்கு.. என்று தனிநபர்களின் கிறிஸ்துவ மதமாற்ற வாசகம் இடம் பெற்றுள்ள மின் கணக்கீடு அட்டைகளை திரும்பப் பெறுவதற்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது

வீடுகள் மற்றும் கடைகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அளவை மின் கணக்கீடு அட்டைகளில் மின்வாரிய ஊழியர்கள் குறித்துக் கொடுக்கின்றனர். இதற்கான மின் கணக்கீடு அட்டைகளை தனியார் நிறுவனங்கள் வழங்குகின்றன. அந்த நிறுவனங்கள் அந்த அட்டையின் கீழே தங்கள் நிறுவன விளம்பரங்களை சிறிய அளவில் வெளியிடுகின்றன.

இந்த வசதியைப் பயன்படுத்திக் கொண்டு, தனி நபர்கள், மதமாற்றம் செய்ய வெளிநாடுகளில் இருந்து பெரும் தொகைகளைப் பெற்றுக் கொண்டு கூட்டங்களைக் கூட்டி மதமாற்றம் செய்பவர்கள், சர்ச்சுகளின் வழியாக மதமாற்றம் செய்யும் கும்பல்கள், மத மாற்றத்தில் ஈடுபடும் வகையில் “உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக… தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள்… என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கல்… பைபிளில் இருந்து யோவான்… – என்றும், உங்கள் செப உதவிக்கு எங்களை அணுகுங்கள்… உங்களுக்காக செபிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்கின்ற வாசகங்களுடன் அவர்களின் தொடர்புக்கான மொபைல் போன் எண்களையும் அச்சிட்டு கொடுத்து அதை வினியோகத்திற்கு விட்டுள்ளனர்

eb prachar christ - 2025வேலூர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த மின் கணக்கீடு அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன! இதுகுறித்து புகார் எழுந்தது!

சமூக வலைதளங்களில் இந்தத் தகவல் வைரலாக பரவியது. இதையடுத்து  தமிழ்நாடு மின் வாரிய தலைவர் விக்ரம் கபூர், மின் பகிர்மான அதிகாரிகளிடம் இது குறித்து விளக்கம் அளிக்கும்படி அறிக்கை கேட்டுள்ளார். மேலும் சர்ச்சைக்குரிய அட்டைகளுக்கு பதிலாக புதிய அட்டைகளை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்

இந்த விவகாரம் குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியபோது, மின் கணக்கீடு அட்டையில் மதம் தொடர்பான வாசகங்கள் அச்சிடுவது மிகப்பெரும் தவறு! இதற்கு அனுமதி அளித்த அதிகாரி யார்? அவருக்கு தெரிந்துதான் நடந்ததா என்பது குறித்தும் மின்பகிர்மான இயக்குனர் வழியாக வேலூர் மண்டல தலைமைப் பொறியாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது! அதிகாரிகளின் பங்கு இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்! வேலூரைத் தவிர வேறு மண்டலங்களிலும் இது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம் பெற்ற அட்டைகள் வழங்கப்பட்டுள்ளனவா என்பது குறித்தும் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறினர்!

eb vellore chiristian - 2025முன்னதாக இந்து முன்னணி அமைப்பினர் நேற்று பள்ளி கொண்டா மின்வாரிய அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்! அப்போது சமாதானம் பேசிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறினர்!

இது ஒருபுறம் இருக்க… இத்தகைய வாசகங்களை அச்சிட்டுக் கொடுத்த மின் வாரிய அலுவலர்கள் மின் கணக்கீட்டாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுப்பது போல் இந்த விளம்பரங்களை அளித்த நபர்கள் மீதும் நிறுவனங்கள் கிறிஸ்தவ மதமாற்ற நிறுவனங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இத்தகைய முறைகேடுகள் இனி நடக்காமல் இருக்கும் என்று கூறுகின்றனர் இந்து அமைப்பினர்.

இத்தகைய விளம்பர வாசகங்களை அரசுத் துறையைப் பயன்படுத்தி முறைகேடாக பணம் கொடுத்து அரசு பணியாளர்களை மோசடிக்குத் தூண்டிய  சலோம் ரிவைவல் ப்ரேயர் மினிஸ்ட்ரீஸ் என்ற அமைப்பை நடத்தி வரும், சரன் சலோம் (9843978092) Pr Shadrach 7305349192 என்பவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே இந்த அட்டைகளில் விளம்பரம் கொடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தற்போது வலுத்து வருகின்றன!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories