இன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள்: கலெக்டர் சந்தீப்நந்தூரி அறிவிப்பு

தமிழகம்

14 Sep06 Amma plan camp - 2026

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று அம்மா திட்ட முகாம் நடக்க உள்ள கிராமங்களின் பட்டியலை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் உள்ள அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசால் அம்மா திட்ட முகாம் அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடக்க உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில், தூத்துக்குடி தாலுகாவில் கோரம்பள்ளம் பகுதி–2 கிராமத்திலும், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் முறப்பநாடு கோவில்பத்து கிராமத்திலும், திருச்செந்தூர் தாலுகாவில் சேர்ந்தமங்கலம் கிராமத்திலும், சாத்தான்குளம் தாலுகாவில் கருங்கடல் கிராமத்திலும், கோவில்பட்டி தாலுகாவில் தோணுகால் கிராமத்திலும், விளாத்திகுளம் தாலுகாவில் சங்கரலிங்கபுரம் கிராமத்திலும், எட்டயபுரம் தாலுகாவில் ராஜாப்பட்டி கிராமத்திலும், ஓட்டப்பிடாரம் தாலுகாவில் ஜெகவீரபாண்டியாபுரம் கிராமத்திலும், கயத்தாறு தாலுகாவில் காமநாயக்கன்பட்டி கிராமத்திலும், ஏரல் தாலுகாவில் கீழ்பிடாகை கஸ்பா கிராமத்திலும் அந்தந்த தாசில்தார்கள் தலைமையில் முகாம் நடக்க உள்ளது.

இந்த முகாம்களில் மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு– இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள், மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்களை கொடுக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.