ஒரே நாளில் இவ்வளவு உயர்வா? விரைவில் RS, 100 ஐ நோக்கி பெட்ரோல் பீடு நடை போடக் கூடும் என்று எச்சரிக்கின்றனர் வல்லுநர்கள்.
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 51 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ.83.13 காசுகளாகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 56 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ.76.17 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை வெள்ளிக்கிழமை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால், பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் அவதியுற வைத்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால், அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.
அதுமட்டுமின்றி ஓட்டல் சாப்பாடு, உணவு பண்டங்களின் விலையும் உயர்கிற நிலை ஏற்பட்டு உள்ளது. இப்போதே ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் ஆங்காங்கே உயர்த்தப்பட்டு உள்ளது. கால்டாக்சி கட்டணமும் உயர்கிறது. இது சாமானிய மக்களுக்கு மிகுந்த வேதனையை அளித்து வருகிறது.




