தென்காசி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 38 பேர் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில், ஏற்கெனவே 6 பேர் குணமடைந்தனர்.
இந்நிலையில், புளியங்குடியைச் சேர்ந்த மேலும் 3 பேர் குணமடைந்தனர். அவர்கள் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், மாவட்டத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 6 நாட்களாக தென்காசி மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை. நன்னகரம் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்ட நிலையில், புளியங்குடியும் மெல்ல விடுபட்டு வருகிறது.
தற்போது 29 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.