சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் அன்மோல்பிரீத் சிங் கேட்ச்

விளையாட்டு

04 Nov05 anmolpreet singh catch - 2026

இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ரஞ்சி டிராபியில் இளம் வீரர் அன்மோல்பிரீத் சிங் பிடித்த கேட்ச் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் மொத்தம் 100 டெஸ்ட் போட்டிகள் கொண்ட நீண்ட தொடரான ரஞ்சிடிராபி தொடர் கடந்த நவம்பர் மாதம் 1-ஆம் தேதி துவங்கியது. இந்த தொடர் பிப்ரவரி 6-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த தொடரில் பஞ்சாப் மற்றும் ஆந்திரா அணிகளுக்கிடையேயான போட்டி விசாகப்பட்டிணம் ACA-VDCA கிரிக்கெட் மைதானத்தில் நடைப்பெற்று வருகின்றது.

பஞ்சாப் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து யுவராஜ் நீக்கப்பட்டு, மந்தீப் சிங் கேப்டனாக செயல்படுகிறார்.

இந்நிலையில் இந்த போட்டியில் ஆந்திரா பேட்ஸ்மேன் ஸ்ரீகர் பரத் கொடுத்த கேட்சை, பஞ்சாப் அணி வீரர் அன்மோல்பிரீத் பறந்து சென்று மிகவும் நேர்த்தியாக கேட்ச் பிடித்தார்.

மேலும் இந்த வீடியோவைக் கண்ட சிலர் தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர் ஜாண்டி ரோட்சையே மிஞ்சிவிட்டார் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.