சாவர்க்கர் குறித்து தவறான தகவல்.. ராகுல் மீது வழக்கு பதிவு!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
04 July26 Rahul Gandhi - 2026

வீர்சாவர்க்கர் பற்றி தவறான தகவல்களை கூறியதாக, ராகுல்காந்தி மீது மும்பை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வீர்சாவர்க்கரின் வம்சாவளியை சேர்ந்த ரண்ஜீத் சாவர்க்கர் என்பவர் மும்பை சிவாஜி பார்க் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், அந்தமான் சிறையில் இருந்து விடுவிக்குமாறு கோரி பிரிட்டிஷாருக்கு வீர்சாவர்க்கர் மன்னிப்பு கடிதம் எழுதியதாக ராகுல்காந்தி கூறியதாகவும், இது தவறான தகவல் என்றும்  குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் ராகுல்காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டிஷாரால் சாவர்க்கர் 27 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாகவும், அவரது புகழுக்கு களங்கம் வகையில் தேர்தல் பேரணியில் பேசியதால் ராகுல்காந்தி மீது புகார் கொடுத்திருப்பதாகவும் ரண்ஜீத் சாவர்க்கர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஆர்.எஸ்.எஸ்., இயக்கம்தான் காந்தியைக் கொன்றது என்று தாம் கூறியது தவறு என்று நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார் ராகுல் என்பது குறிப்பிடத் தக்கது. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.