
அகில இந்திய வானொலி நிலையங்களில் பெண் அறிவிப்பாளர்களுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ளார், மத்திய அமைச்சர் மேனகா காந்தி.
நாடு முழுவதும் அகில இந்திய வானொலியின் பல்வேறு நிலையங்களில், பெண் அறிவிப்பாளர்களுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்படுவதாக புகார் வந்திருக்கிறது என்றும், இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அகில இந்திய வானொலி நிலையங்களை நிர்வகிக்கும், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையின் இணையமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் மேனகா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
அகில இந்திய வானொலி அறிவிப்பாளர் மற்றும் தொகுப்பாளர்கள் சங்கத்திலிருந்து வரப்பெற்ற பாலியல் தொந்தரவு தொடர்பான புகார் கடிதத்தின் அடிப்படையிலேயே இந்தக் கடிதத்தை அவர் எழுதியிருந்தாராம்!



