சபரிமலைக்குச் செல்ல சசிகலா டீச்சருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க உத்தரவு!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

sasikala teacher - 2026

பத்தனம்திட்ட: சபரிமலைக்குச் செல்ல சசிகலா டீச்சருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

சபரிமலை செல்லும் வழியில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட கேரள இந்து ஐக்கிய வேதி தலைவர் சசிகலா டீச்சர், முதலில் ரன்னி காவல் நிலையத்தில் தடுத்து நிறுத்தப் பட்டார். பின்னர் அவர், திருவல்லா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிமன்றம் சசிகலா டீச்சருக்கு ஜாமீன் வழங்கியதுடன் காவல்துறை பாதுகாப்போடு, அவரை சபரிமலைக்குச் அழைத்துச் செல்ல உத்தரவு பிறப்பித்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.