370 நீக்கத்தைக் கொண்டாடிய ஆர்.எஸ்.எஸ்., தொண்டர் மீது முஸ்லிம்கள் கொலைவெறித் தாக்குதல்!

Published:

kashmir rip - 2026

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370 வது சட்டப் பிரிவை திரும்பப் பெற்று, ஜம்மு-காஷ்மீரை முழுமையாகவும், இந்தியாவின் பிற பகுதிகளுடன் எந்த நிபந்தனையும் இன்றி ஒருங்கிணைக்க மோடி அரசு ஒரு துணிச்சலான நடவடிக்கை எடுத்தது.

மேலும், மோடி அரசு ஜம்மு-காஷ்மீரை இரண்டாகப் பிரித்து அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றியது! காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களை உருவாக்கவுள்ளது.

அரசின் இந்த நடவடிக்கையை நாடு முழுதும் பலரும் கொண்டாடி மகிழ்ந்தனர். இனிப்புகள் கொடுத்தும் வெடி வெடித்தும் மக்கள் பலரும் உற்சாகமாகக் கொண்டாடினர்.

இந்த நிலையில், ​ இந்த சரித்திரப் புகழ் வாய்ந்த அரசின் நடவடிக்கையைக் கொண்டாடியதற்காக, ​ராஜஸ்தானில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர் ஒருவர் கொடூரமாக தாக்கப் பட்டுள்ளார்.

ராஜஸ்தானில் உள்ளூர் ஆர்எஸ்எஸ் தொண்டர் சந்தீப் குப்தா, 5 முஸ்லிம் இளைஞர்களால் கொடூரமாக தாக்கப்பட்டார். ஜம்மு-காஷ்மீரில் 370 வது பிரிவை ரத்து செய்ததைக் கொண்டாடியதற்காக அவரை முஸ்லிம் இளைஞர்கள் தாக்கினர் என்று சந்தீப் குப்தாவின் தந்தை கூறியுள்ளார். சந்தீப் இப்போது ஜலவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

சந்தீப்பின் தந்தை இது குறித்துக் கூறிய போது, சந்தீப் குப்தாவின் வயிறு மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சந்தீப்பின் நண்பர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதாக அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.

5 முதல் 7 முஸ்லீம் இளைஞர்கள் சந்தீப் குப்தாவை சாலையில் நிறுத்தி அவரை அடிக்கத் தொடங்கினர் என்று கோட்டாவைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் தொண்டர் ஹிமான்ஷு தகவல் தெரிவித்துள்ளார்.

கொடூரத் தாக்குதலில் இருந்து தப்பிக்க, சந்தீப் தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டு அங்கிருந்து ஓடியுள்ளார். அப்போது, வேறு சில முஸ்லீம் இளைஞர்கள் அவரைப் பிடித்து கொடூரமாக அடிக்கத் தொடங்கினர். சந்தீப்பின் வயிற்றிலும் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது! இதனால் பாதிக்கப் பட்ட சந்தீப் 2 மணி நேரத்திற்கும் மேல் மயக்கத்தில் இருந்ததாகவும், இன்னும் பேசும் நிலையில் இல்லை என்றும் ஹிமான்ஷு கூறியுள்ளார்.

370 வது பிரிவு வாபஸ் பெறப் பட்டதை அவர்கள் கொண்டாடினார்கள் என்றும், அதனை முஸ்லிம்கள் நன்றாக ‘கவனித்தனர்’ என்றும், அவர்கள் சந்தீப் குப்தாவை மட்டுமே குறிவைத்து தாக்கியுள்ளனர் என்றும் ஹிமான்ஷு கூறியுள்ளார். இந்த வழக்கை தற்போது போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img