கணவனின் அலட்சியம் ! மனைவி தற்கொலை ! பாகுபலி பட நடிகர்க்கு நேர்ந்த அதிர்ச்சி !

இந்தியா கிரைம் நியூஸ் சினி நியூஸ் சினிமா

mathu pragash - 2026பாகுபலி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைத் தந்தது. அந்த படத்தில் சின்னச்சின்ன கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்களுக்கெல்லாம் மிகப்பெரிய முகவரியையும் அதன்மூலம் நிறைய வாய்ப்புகளையும் தேடித் தந்தது.

அந்த வகையில் பாகுபலி படத்தில் பல்வாள் தேவனாக நடித்த ராணாவின் கீழ் பணியாற்றும் சேனாதிபதிகளில் ஒருவராக நடித்தவர் தெலுங்கு நடிகர் மது பிரகாஷ். பாகுபலி படத்தை தொடர்ந்து இவருக்கு சினிமா மற்றும் சின்னத்திரை இரண்டிலும் நிறைய வாய்ப்புகள் வந்தவாறு இருக்கின்றன.இவர் கடந்த 2015 ல் பாரதியை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பாரதி கணவரின் பெற்றோருடன் பஞ்சவடி கிராமத்தில் வசித்து வந்துள்ளார்

madhu prakash 1 - 2026இதனால் எப்போதுமே பிஸியான நடிகராக இருந்து வருகிறார் மது பிரகாஷ். இதனால் மது பிரகாஷ் வீட்டிற்கு தாமதமாக வந்துள்ளார்.அவரது மனைவியான பாரதிக்கு தனது கணவர் படப்பிடிப்பு முடிந்து, நேரம் காலம் இல்லாமல் வீடு திரும்புவதில் விருப்பம் இல்லாமல் இருந்ததாம். மேலும் இவ்வாறு தாமதமாக வீடு திரும்புவதால் கணவருக்கு வேறு ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்கிற சந்தேகமும் இருந்து வந்துள்ளது.

பலமுறை இதுகுறித்து கணவருடன் சண்டையிட்ட பாரதி நேற்று முன் தினம் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அன்று காலை மது பிரகாஷ் ஜிம்மிற்கு போவதாக மனைவியிடம் சொல்லிவிட்டு கிளம்பியவர், வீட்டிற்கு வராமல் அப்படியே படப்பிடிப்பிற்கு சென்றுவிட்டாராம்.

இது குறித்து அறிந்த பாரதி கணவனிடம் சண்டை போட்டதுடன் உடனே வீட்டிற்கு வராவிட்டால் தான் விபரீதமான முடிவை எடுப்பேன் என எச்சரித்துள்ளார். ஆனால் அதைப் பொருட்படுத்தாத மது பிரகாஷ், இரவு ஏழரை மணிக்கு வீடு திரும்பியுள்ளார். அப்போது பாரதி வீட்டில் தற்கொலை செய்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்து போனாராம். காவல்துறை இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.