அத்திவரதரை பார்க்க வராதீங்க…! வாகனங்களைத் திருப்பி விட்ட போலீஸார்!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

kanchipuram athivarathar1 - 2026காஞ்சிபுரம் அத்தி வரதர் வைபவத்தில் பெருமானை தரிசிப்பதற்காக நேற்று பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் குவிந்தது! இதனால் தென்மாவட்டங்களில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி வந்த பக்தர்களின் வாகனங்களை விழுப்புரம் போலீசார் திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்!

காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசனம் செய்ய நேற்று முன்தினம் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குவிந்தனர். சுவாமி தரிசனம் செய்ய 10 மணி நேரத்துக்கும் மேல் ஆனதால் பெரும் சிரமம் ஏற்பட்டது. இதை அடுத்து காஞ்சிபுரத்திற்கு வரும் பக்தர்களுக்கு அங்கு உள்ள கூட்ட நெரிசல் குறித்து தெரிவிக்க விழுப்புரம் மாவட்ட போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது

இதன்படி விழுப்புரம் மாவட்ட போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டோல்கேட்டில் வேன் கார் மற்றும் பஸ் உள்ளிட்ட வாகனங்களை ஆய்வு செய்தனர்! அதில் காஞ்சிபுரம் நோக்கி வரும் பக்தர்களிடம் அங்குள்ள கூட்ட நெரிசல் குறித்து அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

kanchipuram athivarathar electircshock - 2026மதுரை திருச்சி தூத்துக்குடி நாமக்கல் ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த வாகனங்களை உளுந்தூர்பேட்டை டோல்கேட்டில் போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களுக்கு அறிவுரை கூறினர் பின்னர் அவர்களை அங்கிருந்து காஞ்சிபுரம் நோக்கிச் செல்ல விடாமல் திருப்பி அனுப்பி வைத்தனர்!

kanchipuram athivarathar - 2026சேலம் ஈரோடு கோவை பகுதிகளில் இருந்து வந்த வாகனங்களை கள்ளக்குறிச்சி டோல்கேட்டில் நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதனால் நீண்ட தொலைவில் இருந்து வந்த பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்!

வேறு வழியின்றி மற்றும் கோவில்களுக்கு செல்வதாகக் கூறி அங்கிருந்து சென்றனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.