ஓடும் இரயிலில் இளைஞர்கள் செயலால்.. அதிர்ச்சி!

Published:

train 2
train 2

தங்கள் வீர திறமைகளையும், துணிச்சலையும் காட்டும் முயற்சியில், இளைஞர்கள் அடிக்கடி ஓடும் வாகனங்களில் ஆபத்தான முறையில் சாகசங்களில் ஈடுபட முயற்சி செய்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

இத்தகைய முயற்சிகள் மிகவும் ஆபத்தானவை மற்றும் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று சொல்லத் தேவையில்லை.

ஓடும் ரயிலில் ஏறவோ இறங்கவோ கூடாது. தொங்கியப்படி செல்லக் கூடாது, சாகசங்களில் ஈடுபடக்கூடாது என எத்தனை முறை எச்சரித்தாலும், இதுபோன்ற அட்டகாசத்தில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. ஆனால் அதன் விளைவுகளை அவர்கள் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.

இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஓடும் ரயிலில் சில ஆபத்தான சாகசங்களை ஈடுபடுவது குறித்த ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதிர்ச்சியூட்டும் அந்த வீடியோவில், ஓடும் ரயிலில் ஏறும் அந்த இளைஞன் ரயில் கதவின் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு, பிளாட்பாரத்தில் சறுக்கிக்கொண்டே வருவதைக் காணலாம்.

பிளாட்பாரத்தை தாண்டிய பிறகு, ரயில் பாதையின் அருகில் உள்ள கம்பத்தை மீண்டும் மீண்டும் குதிப்பது மற்றும் தொடுவது போன்ற பல சாகசங்களை அவர்கள் செய்கிறார்.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

இதுமட்டுமின்றி, கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு ரயிலில் இருந்து குதித்து சுவற்றின் மேல் நடக்கிறார். அடுத்த ஸ்டேஷன் வந்தவுடன், அவர் தனது நண்பர்களுடன் ரயிலில் இருந்து இறங்கி செல்கிறார்.

வீடியோவைப் பார்த்த பலர், உயிரிழப்பு ஆபத்தை உணராமல் அந்த இளைஞர்களின் செயல்களை கண்டு மக்கள் அச்சமடைந்தனர். சாகசங்கள் என்ற பெயரில் இதுபோன்ற அட்டகாசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது கோபத்தை வெளிப்படுத்தினர்.

கடந்த காலங்களிலும், இதுபோன்ற பல ஸ்டண்ட் முயற்சிகள் சோகமான விளைவுகளை ஏற்படுத்தி இருகின்றன். இதுபோன்ற சாகசங்கள் செய்யும் போது சிலர் தங்கள் உயிரை கூட இழந்துள்ளனர் மற்றும் பலர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

தயவுசெய்து இதுபோன்று செயல்களில் யாரும் ஈடுபடாதீர்கள், செய்யாதீர்கள். மற்றவர்களையும் இதைச் செய்ய விடாதீர்கள். சாகசங்களில் உங்கள் உயிரைப் பணயம் வைக்க வேண்டாம். உயிர் விலைமதிப்பற்றது என்பதை உணருங்கள்.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

Related articles

Recent articles

spot_img