திருமூர்த்தி அருவியில் வெள்ளம்; குளிக்க தடையால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன் சுற்றுலா லைஃப் ஸ்டைல்

thirumurthi anai falls - 2026

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த திருமூர்த்தி மலை அணைப்பகுதியில் வெள்ளப்பெருக்கு அதிகமாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப் பட்டது.

உடுமலைப்பேட்டை சுற்று வட்டாரப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் திருமூர்த்தி அணையில் மழை வெள்ளம் அதிகளவில் வந்து கொண்டுள்ளது. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பஞ்சலிங்க அருவி பகுதியில் சென்று குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது

தற்போது கார்த்திகை மாதம் துவங்கியுள்ள நிலையில் ஐயப்ப பக்தர்கள் வருகை திருமூர்த்தி மலை பகுதியில் அதிக அளவில் காணப்படுகிறது. சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் திருமூர்த்தி மலையில் உள்ள அமணலிங்கேஸ்வரர் மற்றும் மும்மூர்த்திகளான பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய சுவாமிகளை தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தி இங்கிருந்து மீண்டும் சபரிமலை புறப்பட்டுச் செல்கின்றனர்

ஆனால் மழை வெள்ளம் அதிகமாக அருவியல் வந்து கொண்டிருப்பதால் அருவியில் குளிக்க முடியாத நிலையில் ஏமாற்றத்துடன் ஒரு சில பகுதிகள் மட்டுமே குளித்துவிட்டு சாமி தரிசனம் செய்துவிட்டு புறப்பட்டுச் செல்கின்றனர்

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் அருவியில் குளிக்க முடியாத நிலையில் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.