20 தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து திமுக., தலைமை முடிவு செய்யும் என்று, சாத்தூரில் வைகோ கூறினார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, டிசம்பர் 15ம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வாக்குச்சாவடிகளுக்கும் ம.தி.மு.க பணிக்குழு அமைக்கப்படும் என்றார்.
மேலும், திமுக தலைமையிலான அணி, 20 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் பிப்ரவரியில் வந்தாலும் வெற்றி பெறும்! நாடாளுமன்ற தேர்தலுடன் வந்தாலும் வெற்றி பெறும். 40 நாடாளுமன்ற தொகுதியிலும் திமுக., தலைமையிலான அணியே வெற்றி பெறும்.
20 தொகுதிகளில் தி.மு.க போட்டியிடுமா அல்லது தோழமைக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்குமா என்பது குறித்து திமுக தலைமைதான் முடிவெடுக்கும் என வைகோ தெரிவித்தார்.
அதன் பின்னர் தொடர்ந்து மதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.