மார்கழி வழிபாடுகளை முன்னிட்டு திருச்செந்தூர் கோவில் நடை திறப்பு நேரத்தில் மாற்றம்!

ஆன்மிகச் செய்திகள் நெல்லை லைஃப் ஸ்டைல் விழாக்கள் விசேஷங்கள்
thiruchendur subramania swami - 2026

மார்கழி மாதம் தொடங்கும் நிலையில், நாளை அதிகாலை 3 மணிக்கே திருச்செந்தூர் சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் நடை திறக்கப்படுகிறது.

இந்துக்களின் அதிகாலை வழிபாட்டுக்குரிய மாதமான மார்கழி மாதம் நாளை தொடங்குகிறது. இதை முன்னிட்டு, முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்சீரலைவாய் திருச்செந்தூர் ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமி கோவிலில், அதிகாலை நடை திறப்பு மற்றும் பூஜை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி நாளை முதல் மார்கழி மாதம் முடியும் ஜனவரி 14ஆம் தேதி வரை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப ஆராதனை நடைபெறும்.

4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 7.30க்கு உச்சிகால அபிஷேகம், மாலை 3.30க்கு சாய ரட்சை தீபாராதனை, மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகம் ஆகியவை நடைபெறும்! இரவு 8.30க்குள் தீபாராதனை முடிந்து நடை சாத்தப்படும்!

ஆங்கிலப் புத்தாண்டில் நடை திறப்பு நேரம் மாறும் என்று திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.