அடிச்சி தூள் கெளப்பிய விஸ்வாசம் டிரெய்லர்! வெளியான 12 நிமிடத்தில் 10 லட்சம் பேர் பார்த்து சாதனை!

சினி நியூஸ் சினிமா லைஃப் ஸ்டைல்
maxresdefault 92 - 2026

தல ரசிகர்கள் வெகு ஆவலுடன் எதிர்பார்த்திருந்த டிரெய்லர் ரிலீஸாகியுள்ளது. சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் டிரெய்லர் எப்போது வெளியாகும் என்று ஆவலுடன் காத்திருந்தனர் ரசிகர்கள். அவர்களது எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், டிரெய்லர் தற்போது வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அஜித் நடித்து பொங்கலுக்கு வெளியாகவுள்ள விஸ்வாசம் படத்திற்கு அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. இப்படத்தின் டீசர் வீடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையி, இன்று மதியம் 1.30 மணி அளவில் விஸ்வாசம் படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியானது.

இதையடுத்து, அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இந்த டிரெய்லரை ட்ரெண்ட் ஆக்கி, திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர். டிவிட்டரில் #Viswasamtrailer ஹேஷ்டேக் டிரெண்ட்டில் உள்ளது.

விஸ்வாசம் படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகிறது. டிரெய்லரே ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் மாஸ் காட்டியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.