மம்தா கூட்டிய கூட்டம்… கபடர்களின் சங்கமம்! மத்திய அமைச்சரின் கமெண்ட்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
babul supriyo - 2026

கோல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூட்டியுள்ள கூட்டம், கபடர்களின் சங்கமம் என்று கூறியுள்ளார் மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோ!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இன்று கோல்கத்தாவில் பாஜக.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பேரணி, மாநாடு ஒன்று நடத்தி வருகிறார். இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பாஜக.,வுக்கு எதிரான மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் திரண்டுள்ளனர். 22 கட்சிகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த மாநாடு குறித்து மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோ தனது டிவிட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், இந்த மாநாடு கபடர்களின் சங்கமம். இந்த போலித்தனத்தை கோல்கத்தா இன்று காண்கிறது.

சுயலாபத்திற்காக அரசியல் கட்சிகள் இணையும் பொருந்தாக் கூட்டணி. திரிணாமுல் காங்கிரஸ் மாநிலத்திற்காக செலவிடாமல், இந்த மாநாட்டிற்காக மிகப் பெரிய அளவிலான தொகையை செலவிட்டுள்ளது. மக்களை போக்குவரத்து நெரிசலில் சிக்க வைத்து, துன்பத்திற்கு ஆளாக்கியுள்ளது!… என்று கூறியுள்ளார்.

சுயலாபத்திற்காக அரசியல் கட்சிகள் இணையும் பொருந்தாக் கூட்டணி. திரிணாமுல் காங்கிரஸ் மாநிலத்திற்காக செலவிடாமல், இந்த மாநாட்டிற்காக மிகப் பெரிய அளவிலான தொகையை செலவிட்டுள்ளது. மக்களை போக்குவரத்து நெரிசலில் சிக்க வைத்து, துன்பத்திற்கு ஆளாக்கியுள்ளது!…

மம்தா பானர்ஜி பதவியில் இருக்கும் காலத்தில், 44 பாஜக., நிர்வாகிகள் படுகொலை செய்யப் பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். மனித உயிர்களை விட அரசியல் பெரிதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சாதாரண மனிதனால் கௌரவமாக வாழக்கூட இயலாத நிலையில் மேற்கு வங்கத்தை ஊழலும் ரவுடித்தனமும் நிறைந்த மாநிலமாக மாற்றியிருக்கிறார் மம்தா என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.