
சென்னை: வரும் நிதி ஆண்டில், 3 லட்சம் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க திட்டம் உள்ளதாக கூறினார் ஓ.பன்னீர்செல்வம்
தமிழக பட்ஜெட் 2018-19 தாக்கலின் போது, ஓபிஎஸ் குறிப்பிட்டவை:
திறன் மேம்பாட்டு இயக்க நிதி ரூ.150 கோடியிலிருந்து ரூ.200 கோடியாக உயர்த்தப்படும்
வரும் நிதியாண்டில் 3 லட்சம் இலவச வீட்டுமனை பட்டா வழங்க அரசு திட்டம்
தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ரூ.158 கோடி நிதி ஒதுக்கீடு.
சத்துணவுத் திட்டத்துக்கு 5,611.62 கோடி ரூபாய் ஒதுக்கீடு; மானியம், உதவித்தொகைக்கு 75,723 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
மாற்றுத் திறனாளிகளின் சுயவேலைவாய்ப்பு உதவி 1,000 பேரில் இருந்து 2,000 பேராக உயர்வு.
மகளிர் சுகாதார திட்டத்தில் சானிட்டரி நாப்கின் வழங்க ரூ.60.58 கோடி ஒதுக்கீடு.
100 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.
மாற்றுத்திறனாளிகள் சுயவேலைவாய்ப்பை ஊக்குவிக்க நிதி ரூ. 10,000 இல் இருந்து 25,000 ஆக உயர்வு.
2017 ஜூலை முதல், 2018 பிப். வரை ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.632 கோடி.



